
ராஞ்சி: கொரோனா ஊரடங்கு காலத்தில், வீடியோ கேம்களை, குறிப்பாக PUBG விளையாடி பொழுது போக்குகிறார் மகேந்திரசிங் தோனி என்று தெரிவித்துள்ளார் அவரின் மனைவி சாக்சி.
கொரோனாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு காரணமாக, பல விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பலர், தங்கள் ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவும், அவர்கள் நினைவிலிருந்து தாங்கள் அகன்று விடக்கூடாது என்பதற்காகவும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.
ஆனால், மகேந்திரசிங் தோனியோ இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாத ஒன்றாக இருந்தது.
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் இவரின் பொழுதுபோக்கு என்ன என்ற தகவல், தோனியின் மனைவி மூலமாக வெளியே வந்துள்ளது. வீடியோ கேம்களை, குறிப்பாக PUBG விளையாடி, தோனி பொழுதுபோக்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
மகேந்திரசிங் தோனி, பொதுவாக, வீடியோ கேம் விளையாடுவதில் மிகவும் பிரியமானவர். அணியின் சக வீரர்கள்கூட, இதுகுறித்து அடிக்கடி தோனியிடம் பேசியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel