டெல்லி: தமிழகத்தை போன்று டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
அதன்படி மே 4 உடன் ஒப்பிடும்போது தலைநகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .1.67 அதிகரித்து ரூ .71.26 ஆகவும் டீசல் ரூ .7.10 ஆகவும் ரூ .69.29 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லி அரசு, வாகன எரிபொருட்களின் மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) தலா 30 சதவீதமாக உயர்த்தியதால் விலை உயர்வு நிகழ்ந்து இருக்கிறது. பெட்ரோல் 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும், டீசல் 16.75 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
முன்னதாக டெல்லி அரசானது, மதுபான விலை 70 சதவீதம் ‘சிறப்பு கொரோனா கட்டணம்’ என்று பெயரிட்டு அதிகரித்தது. இப்போது பெட்ரோல், டீசலுக்கு வாட் வரி உயர்த்தியிருக்கிறது. இவ்விரு நடவடிக்கைகளும் வருவாய் உயர்வுக்கான வழிகளாக பார்க்கப்படுகின்றன.
முன்னதாக மார்ச் 24ம் தேதி நள்ளிரவு தொடங்கி மே 17 வரை நீட்டிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டை கிட்டத்தட்ட 70 சதவீதம் குறைத்துவிட்டது.