டெல்லி:
கொரோனா அறிகுறி தென்பட்டால் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், லேசான கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள கொரோனா நோயாளிகள் அரசு கண்காணிப்பு அதிகாரியுடனும், ஒரு மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு தளர்வின்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு வழி காட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்ட நிலையில், தற்போது, லேசான தொற்று அறிகுறி உள்ளவர்கள் குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுஉள்ளது.
யார் யார் வீட்டு தனிமைப்படுத்தப்படலாம்…
* மருத்துவமனையில் லேசான அறிகுறி உள்ளவர்கள் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டால், அந்த நபர் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கலாம்.
* அதேபோல், லேசான அறிகுறி உள்ள நபர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு வசதிகள் இருக்க வேண்டும்.
* வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளியைப் பராமரிக்க ஒரு பராமரிப்பாளர் 24 மணி நேரமும் உடன் இருப்பார்.
* இதேபோல், பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* கொரோனாவுக்கான ஆரம்பக்கட்ட சிகிச்சையாக 80 சதவீதம் பேருக்கு தொடர்பு சிகிச்சை, 15 சதவீதம் பேருக்கு மாத்திரையுடன் கூடிய ஆக்சிஜன் தெரபி சிகிச்சை அளிக்கலாம்.
* ஆரோக்யா சேது செயலியை மொபைல்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தொடர்ந்து அந்த செயலி செயல்பாட்டிலேயே இருக்க வேண்டும்.
* அந்த நபர் தனது உடல்நிலையை கண்காணிக்க ஒப்புக் கொள்ள வேண்டும். மேலும் கண்காணிப்பு குழுக்களால் தொடர்ந்து பின்தொடரப்பட்டு, அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் தவறாமல் வழங்க வேண்டும்.
மருத்துவர்களை சந்திப்பது எப்போது?
* நோயாளி அல்லது பராமரிப்பாளர் அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
*கடுமையான அறிகுறிகள் தோன்றினால் அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
* சுவாசிப்பதில் சிரமம்
* மார்பில் தொடர்ந்து வலி அல்லது அழுத்தம்
* மன குழப்பம் அல்லது செயல்பட இயலாமை
* உதடுகள் அல்லது முகத்தின் நீல நிறமாற்றங்கள் உருவாகுதல் உள்ளிட்ட அறிகுளிகளின் போது மருத்துவரை அணுக வேண்டும்.
வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளிகளின் அறிகுறிகள் மருத்துவ ரீதியாக தீர்க்கப்பட்டால், கண்காணிப்பு மருத்துவ அதிகாரி ஆய்வக சோதனை முடிந்தபின் தொற்றுநோயிலிருந்து விடுபட்டதாக மருத்துவ அதிகாரி சான்றளிப்பார். அதன் பின்னர் தனிமைப்படுத்ததலை நிறுத்திக் கொள்ளலாம்.