கொரோனா பாதிப்பால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது .
பல படங்களின் படப்பிடிப்பு பாதியிலே நிற்கிறது, முடிந்த படங்கள் வெளியிட முடியாத சூழல், வட்டி ஒரு புறம் ஏறிக் கொண்டே இருக்கிறது. இப்படிப் பல விஷயங்களால் தயாரிப்பாளர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இந்தச் சமயத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் OTT நிறுவனங்கள் புதிய படங்களை வெளியிட்டால் சந்தாதாரர்கள் அதிகரிப்பார்கள் என்று திட்டமிட்டார்கள்.
ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தொடர்ந்து தற்போது, சித்தார்த் நாயகனாக நடித்துள்ள ‘டக்கர்’ படத்தையும் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் நிறுவனம் நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளது உறுதியாகியுள்ளது. ‘கப்பல்’ படத்தின் இயக்குநர் ஜி.கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.