ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி பரிகாரம்

தினசரி விநாயக வழிபாடு, சனிக்கிழமை ஆஞ்சநேய வழிபாடு, காகத்துக்கு எள்ளுக்கலந்த சாதம் வைக்கவும்.
வன்னிமரம் சுற்றுவது,நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது அவசியம்.
அமாவாசை தோறும் குலதெய்வ கோயில் வழிபாடு அவசியம்.
சபரிமலை,திருநள்ளாறு, குச்சனூர் சென்று வரலாம்.
நீலக்கல் மோதிரம்,சனிக்கிழமை நீல நிற ஆடை பயன்படுத்தவும்.
மேற்கு திசை பயணம் தவிர்க்கவும்.
மேற்கு திசையில் இருப்பவர் உறவைத் தவிர்க்கவும்.
பாகற்காய் குழம்பு சாதம் வாரம் தோறும் உண்ணவும்.
எள்ளுருண்டை உண்ணவும்..
சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல் அவசியம்.
நீர், நெருப்பு, மின்சாரம், வாகன பயணம் கவனம் தேவை…
Patrikai.com official YouTube Channel