ஜெனீவா
கொரோனாத் தொற்று பரவிவரும் சூழலில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது உயிருக்கே ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரிஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் விரிவான அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். “தற்போதைய சூழலில் கொரோனாத் தொற்று நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் நாம் அதிக தூரம் கடக்க வேண்டி இருக்கும்.
ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென்அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தீவிரம் கவலை அளிப்பதாக உள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
சீனா, தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாத் தொற்று குறைந்தாலும் மீண்டும் தலையெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே சூழல் சரியாகும் வரை வீட்டிலேயே இருங்கள் என டெட்ரிஸ் உலக மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.