நாகை:
நாகை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் வித்திக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்கவும், கொரோனா வைரஸ் உறுதி உறுதி செய்யப்பட்ட 44 பேரின் குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு காவல் துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பதிக்கப்பட்டவர்கள், குடியிருப்பு பகுதிகள், சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களில் தொடர்பில் உள்ள காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளதா என ரேபிட் கருவியை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நாகையில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என கடைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். பொதுஇடங்களில் உமிழ்நீர் உமிழ்ந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரவீன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.