ஸ்ரீநகர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவில் இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும்.
இந்த குகை கோவிலில் வருடத்தில் மூன்று மாதம் லிங்க வடிவில் பனி இருக்கும்.
பனி லிங்கத்தைத் தரிசிக்க நாடெங்கும் இருந்து லட்சக் கணக்கானோர் அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை மேற்கொள்வார்கள்
இந்த யாத்திரைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதி வாரம் முதல் சுமார் 60 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
மத்திய அரசு இந்த வருடம் அமர்நாத் யாத்திரை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் பருவ நிலை மாறுதல், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் போன்றவற்றால் யாத்திரை ஒத்தி வைக்கப்படுவது உண்டு
தற்போது கொரோனா அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.