வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக அமெரிக்காவில் வேறு நாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக தடுக்க உத்தரவை பிறப்பிக்க போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட கோரமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. 7.92 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதிபர் டிரம்ப், கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம் என்று கூறி உள்ளார். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் அதிகம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் அவர் அண்மையில் தெரிவித்து இருந்தார்.
இந் நிலையில், அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவை வெளியிட்டு உள்ளார். அமெரிக்காவில் வேறு நாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக தடுக்க அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறி இருப்பதாவது: கண்களுக்கு தெரியாத எதிரியின் தாக்குதலால், அமெரிக்க மக்களின் வேலையை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, பிறநாட்டினர் தற்காலிகமாக அமெரிக்காவில் குடியேறும் உத்தரவில் கையெழுத்திட உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.