இஸ்லாமாபாத்:

ண்டை நாடானா பாகிஸ்தான் நாட்டில் பிரபல  சமூக சேவகர் ஃபைசல் எதி (FaisalEdhi) என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளுக்கு பீதி ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தான் நாட்டையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் தினசரி ஏராளமானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.  கடந்த 20ந்தேதி வரை 7,638 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்  தற்போது 8 ஆயிரத்தை கடந்து உள்ளது. இவர்களில்   48 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, உலக நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்ட நிலையில்,  சுமார் 40 ஆயிரம் பாகிஸ்தானியர்களை வெளிநாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வர வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்நாட்டின் பிரபல சமூகசேவகர் ஃபைசல் எதி (FaisalEdhi) பிரதமர் இம்ரான்கானை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், பிரதமர் இம்ரான்கானுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.