சென்னை:
சத்தியம் டிவி செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் மேலும்
26 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது.

சென்னையில் தினகரன் நாளிதழ், சத்தியம் டிவி, பாலிமர் டிவி செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று முதல் தினசரி 50 பேருக்கு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சத்தியம் டிவி அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப் பட்டது. இதில், மேலும் 26 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel