காணும் இடம் எல்லாம் சரக்கு லாரிகள்..
குடிமகன்களுக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பும் மேட்டர்…
ஊரடங்கு காரணமாக மது பாட்டில்கள், நான்கு மடங்கு, ஐந்து மடங்கு விலைக்கு விற்கப்படும் நிலையில், திருவனந்தபுரத்தில் ஆங்காங்கே 300 லாரிகளில் சரக்குகள் ’’சும்மா’’ தேங்கிக் கிடக்கின்றன.
இவை அனைத்தும் மது உற்பத்தி ஆலைகளில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள மதுபான குடோனுக்கு அனுப்பப் பட்ட சரக்குகள்.
மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால், புது சரக்குகளை இறக்கி வைக்க குடோன்களில் இடம் இல்லை.
திருவனந்தபுரத்தில் மொத்தம் 23 மதுபான குடோன்கள் உள்ளன.
அத்தனையும் ‘ஹவுஸ் புல்’’.
எனவே லாரிகளில் வந்துள்ள சரக்குகளை இறக்க முடியாத நிலை உள்ளது.
ஒவ்வொரு குடோனுக்கு வெளியேயும் 25 சரக்கு லாரிகள் நிற்கின்றன. அங்கே இடம் இல்லாததால், ரோட்டு ஓரங்களில் எஞ்சிய லாரிகள் பாதுகாப்பு இன்றி நிற்கின்றன.
இதனால் இரவு-பகலாகக் கண் விழித்து சரக்குகளைக் காவல் காக்கும் லாரி டிரைவர்கள், புலம்பித் தவிக்கிறார்கள்.
சரக்குகளை குடோனில் இறக்கி விட்டு வர மட்டுமே லாரிகளுக்கு ‘பெர்மிட்’ வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் மது உற்பத்தி ஆலைகளுக்குச் சரக்குகளை அந்த லாரிகள் கொண்டு செல்ல முடியாது.
எனவே 300 லாரி சரக்குகளை என்ன செய்வது, என்று குடோன்களை நிர்வாகிக்கும் ‘பெவ்கோ’ அதிகாரிகள், கை பிசைந்து நிற்கிறார்கள்.
– ஏழுமலை வெங்கடேசன்