டில்லி

லக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து பூஜ்ஜியத்துக்கும் கீழே அதாவது மைனஸில் செல்வது குறித்து இங்கே காண்போம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.   சென்ற மாத இறுதியில் ஒரு பாரல் கச்சா எண்ணெய் விலை 20 டாலராக குறைந்தது.   ஆனால் அது கிடுகிடுவெனச் சரிந்து நேற்று ஒரே நாளில் பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்று நியூயார்க் சந்தையில் மைனஸ் 40.32 டாலர் விலையை அடைந்தது.   இது இரண்டாம் உலகப் போர் நேரத்தை விடவே மிகவும் குறைந்த விலையாகும்.

இந்த கணக்குப்படி பார்த்தால் எண்ணெய் வாங்குவோருக்கு விற்போர் ஒரு பாரலுக்கு 40.32 டாலர் அளிக்க வேண்டியது இருக்கும்.   இந்த விலைக் குறைவு எப்படி ஏற்பட்டது? கச்சா எண்ணெய் விலை எவ்வாறு பூஜ்ஜியத்துக்கும் கீழே குறைந்தது?  ஒரே நாளில் பூஜ்ஜியத்தை அடைந்த எண்ணெய் விலை எவ்வாறு மைனஸ் 5, 10 எனக் குறைந்து மைனஸ் 40 டாலரை அடைந்தது? இது குறித்து இங்கு காண்போம்

முதலில் கொரோனாவால் உலகமெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பு இருந்தே கடந்த சில மாதங்களாகக் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.   இந்த வருடத் தொடக்கத்தில் ஒரு பாரல் கச்ச எண்ணெய்யின் விலை 60 டாலராக இருந்தது மார்ச் இறுதியில் 20 டாராக குறைந்துள்ளது.   எந்த ஒரு பொருளுக்கும் தேவை குறையும் போது அதன் விலையும் குறையும் என்பதே இதன் பின்னணியாகும்.

சவுதி அரேபியாவின் தலைமையில் இயங்கும் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் சங்கம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்வதை நடத்தி  வருகிறது.  இதில் சவுதி அரேபியா மட்டும் உலக தேவையில் 10% ஏற்றுமதி செய்கிறது.   எனவே இந்நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு மூலம் விலையைக் குறைக்கவும்,  உற்பத்தி குறைப்பு மூலம் விலையை ஏற்றவும் முடியும்.

ஆனால் உற்பத்தியைக் குறைப்பது மற்றும் முழுவதுமாக நிறுத்துவது என்பது தவறான முடிவாகும்.  ஏனெனில் மீண்டும் இவற்றைத் தொடங்குவது என்பது எளிதானது அல்ல.  இது பொருளாதார மற்றும் தொழில் நுட்ப ரீதியாக மிகவும் கடினமாகும்.   மேலும் ஒரு நாடு மட்டும் உற்பத்தியை நிறுத்தி மற்ற நாடுகள் நிறுத்தவில்லை எனில் அந்த நாடு பெட்ரோலிய சந்தையில் தனது பங்களிப்பை இழக்கும்.   எனவே இந்த நாடுகள் ஏற்றுமதி செய்யும் அளவைப் பொறுத்து விலையில் மாறுதல் இருக்கும்

மார்ச் தொடக்கத்தில் விலை சரிவைச் சமாளிக்க எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஒப்புக் கொள்ளவில்லை.  இதனால் உற்பத்தி அதிகரித்து அனைத்து நாடுகளும் போட்டியிட்டு விலையைக் குறைக்கும் நிலை ஏற்பட்டது.   இது வர்த்தகத்தை வழக்கமாக அதிகரிக்கும்.   ஆனால் உலகெங்கும் கொரோனா பரவுதல் அதிகரித்ததால் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து கச்சா எண்ணெய் தேவையும் குறைந்தது.  அனைத்து போக்குவரத்தும் நின்றது.

ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவின் கருத்து மோதல்கள் கடண்டஹ் வாரம் அமெரிக்க அதிபரின் அழுத்தத்தால் முடிவுக்கு வந்தது.  ஆனால் அது மிகவும் தாமதமான முடிவாகும்.   பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் தங்கள் உற்பத்தியை தினசரி 60 லட்சம் பேரலாகக் குறைத்தன.   இது மிக மிக குறைவான உற்பத்தி ஆகும்.  ஆயினும் உலக அளவில் தினசரி எண்ணெய் தேவை 9 முதல் 10 லட்சம் பேரலாகக் குறைந்தது.   உற்பத்தியை விட தேவை நாளுக்கு நாள் குறையத்  தொடங்கியது.  அதாவது அனைத்து நாடுகளிலும் சேமித்து வைக்க வேண்டிய அளவு எண்ணெய் சேமிப்பு நடந்து விட்டது.  ரயில்கள் மற்றும் கப்பலிலும் முழு அளவு எண்ணெய் சேமிக்கபட்டுளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா அதிக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியைச் செய்ய தொடங்கியது.  இதற்கு முந்தைய அமெரிக்க அதிபர்களைப்  போல் இல்லாமல் டிரம்ப் கச்சா எண்ணெய் விலையைக் கணிசமாக உயர்த்தினார்.  இது தேர்தல் வருடம் என்பதால் டிரம்ப் எண்ணெய் விலையை மேலும் உயர்த்தினார்.

அதே வேளையில் உலக வர்த்தக மையம் மே மாதம் புதிய ஒப்பந்தங்களை இடுவது வழக்கமாகும்.  இந்த வருட ஒப்பந்தம் ஏப்ரல் 21 அதாவது இன்றுடன் முடிவடைகிறது.  எனவே தன்னிடம் இருப்பு உள்ள கச்சா எண்ணெய்யை சந்தையில் உடனடியாக தள்ளிவிட அமெரிக்கா ,முயன்றுள்ளது.    தங்களிடம் உள்ள இருப்பை காலி செய்ய அனைத்து எண்ணெய் உற்பத்தியாளரும் நேற்று போட்டி ஓட்டு விலையை குறைத்துள்ளனர்.  ஏனெனில் உற்பத்தியை நிறுத்தி மீண்டும் தொடங்குவதற்கு ஆகும் செலவை விட இந்த இழப்பு மிகவும் குறைவு என்பதாகும்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும் நாடுகளுக்கு இது ஒரு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.  ஒப்பந்தப்படி இந்த நாடுகள் தேவைக்கு மேல் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும்.   ஆனால் அதைச் சேமித்து வைக்க இடம் இல்லாததால் அவர்களால் அதை எடுத்துச் செல்ல முடியாது.   நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதற்கான செலவு மற்றும் போக்குவரத்துச் செலவு ஆகியவை பல நாடுகளுக்கு ஒரு பெரிய சுமையாக அமையும்.

எனவே இது வாங்குவோர் மற்றும் விற்போர் ஆகிய இரு நாடுகளுக்கும் பிரச்சினையாக அமைந்துள்ளது.   இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை மைனஸில் குறைந்துள்ளது.   பெட்ரோல் உற்பத்தி நாடுகள் சேமித்து வைக்கும் செலவை விடவும் உற்பத்தியை நிறுத்தி மீண்டும் தொடங்கும் செலவை விடவும் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ஒரு பாரலுக்கு 40 டாலர் அளிப்பது மலிவானது எனும் முடிவுக்கு வந்துள்ளன.

மே மாதம் மீண்டும் ஒப்பந்தம் இடும் போது கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்குக் குறையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்    எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது என்றாலும் இந்த அளவுக்குக் குறையாது.   ஜூன் மாத வாக்கில் ஒரு பாரல் கச்சா எண்ணெய் விலை 20 டாலராக இருக்கும்.   அத்துடன்  இது போல நிலை மீண்டும் வராமல் இருக்காது எனவும்  நிச்சயமாகச் சொல்ல முடியாது.  ஏனெனில் கோரோனா பாதிப்பு தொடர்வதால் கச்சா எண்ணெய் தேவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது