டெல்லி:

ந்தியாவில் கொரானா வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கையாக  ஊரடங்கு அமலில் இருந்தாலும், அதன் தாக்கம் சில மாநிலங்களில் வீரியமாகிக்கொண்டே வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்தியபிரதேசம், தமிழகம் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில்  ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாமல் உள்ளது.

இன்றைய நிலையில், 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை பாடாய்படுத்தி வரும் கொரோனா அமெரிக்காவில் ஏராளமானோரை பலிவாங்கி வருகிறது. அடுத்தபடியாக , இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் தீவிரமாகி உள்ளது.  உலகம் முழுவதும் இதுவரை 1- லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,615 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை இந்த வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை  559  ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,854 ஆகவும் உள்ளது. மகாராஷ்ரா, குஜராத், மத்திய பிரதேசம்,  பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களிலும் இந்த வைரஸ் தலைவிரித்தாடி வருகிறது.

இந்தியாவிலேயே கொரோனா பரவலில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவி பகுதியில் கொரோனா பரவி வருவதால், அங்குள்ள மக்கள் பீதிக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த பகுதி முழுவதும்  தனிமைப்படுத்தப்பட்டு  தீவிர சோதனைகளும், கண்காணிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை – 19ந்தேதி) நிலவரப்படி நாடு முழுவதும் 1,612 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, , மகாராஷ்டிரா (552), குஜராத் (367) மற்றும் உத்தரப்பிரதேசம் (179)  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவில் தீவிரமாகி உள்ளது. இதன் காரணமாக,   ஒரே நாளில் 10% க்கும் அதிகமாக அதிகரித்து 17,325 ஆக உயர்ந்தன.

மகாராஷ்டிராவில் 12 புதிய இறப்புகளும், குஜராத் (10), மத்திய பிரதேசம் (5), தெலுங்கானா (3) ஆகியவையும் பதிவாகியுள்ளன. டெல்லி, ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் தலா இரண்டு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, அன்றைய இறப்பு எண்ணிக்கை 39 ஆகவும், மொத்தம் 560 ஆகவும் உள்ளது.

அதேவேளையில், கோவாவில்  கடந்த சில நாட்களாக கொரோனா கேஸ் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  மாநில முதல்வர் இதை தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக இந்தியாவில், கொரோனா வைரஸ் இல்லாததாக அறிவித்த முதல் மாநிலமாக கோவா உருவாகி உள்ளது. கொரோனா தாக்கத்தில் இருந்து சற்று விடுபட்டு வருகிறது ஒடிசா.

தலைநகர்  டெல்லியில் நேற்று மட்டும் புதியதாக 110 பேருக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை   2003 ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனா ஹாட்ஸ்பாட்களில் நோயாளிகளை  அடையாளம் காண சோதனைகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

காராஷ்டிராவில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. மும்பை உள்பட பல பகுதிகளில் அதன் தீக்கம் கடுமையாகி உள்ளது.  அங்கு நேற்று மட்டும் புதிதாக 456 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவினால் இறப்பு விகிதம் 4.8% ஆக உயர்ந்து உள்ளது. ‘

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு  4,200 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில்,  இறப்பு எண்ணிக்கை 223 ஆகவும் உயர்ந்தது.

மகாராஷ்டிரா மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக குஜராத் முன்னேறியுள்ளது.  அங்க  மேலும் பத்து பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இறப்பு எண்ணிக்கை 63 ஆக உள்ளது.  இதுவரை 1,743 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர்.

இறப்பைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா (211), மத்தியப் பிரதேசம் (72) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம்  மூன்றாவது இடத்தில் உள்ளது. தேசிய வெப்பப்பகுதியான அகமதாபாத் தொடர்ந்து வைரஸ் ஹாட்ஸ்ட்டாக மாறி உள்ளது.

குஜராத்தின் தலைநகரத்தில் நேற்று  ஒரே நாளில்  239 பேர் புதியதாக பாதிக்கப்பட்டு உள்ள நிலை யில், அதன்பாதிப்பு  65% பதிவாகியுள்ளது. சூரத் 89 மற்றும் வதேரா 22,  அகமதாபாத்தில் உள்பட 1,101 ஆக உயர்ந்து உள்ளது.  அதே வேளையில் கொரானாவில் இருந்து குணமாகி 12 பேர் வீடு திரும்பி உள்ளனர்..

 உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக நேற்று  177 பேர்  பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை  1,163 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 781  பேர் தப்லீஹி ஜமாஅத்துடன் தொடர்புடையவர்கள் என்று  சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு இதுவரை 17 பேர் பலியான நிலையில், 19 பேர் குணமாகி உள்ளனர்.

த்தியபிரதேச மாநிலத்திலும் கொரோனா தாக்கம் தீவிரமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ரியானாவில்   நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு இதவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  250ஆக உயர்ந்துள்ளது. ஃபரிதாபாத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது,  குர்கானில் நான்கு புதிய வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மேலும், நான்கு புதிய வழக்குகளையும், பிவானி மாவட்டம் ஒன்றையும் அம்பாலா கண்டறிந்தார்.

ராஜஸ்தான் மாநிலம்  ஜெய்ப்பூரில் நேற்று ஒரே நாளில் 127 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.   அங்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 1,478 ஆக அதிகரித்துள்ளது.

ர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக மாநில அரசு தெரிவித்து உள்ள  நிலையில், நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  இது கடந்த  11 நாட்களில் மிகக் குறைவு. கடைசியாக ஏப்ரல் 8 ஆம் தேதி ஆறு வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த நேர்மறை வழக்குகள் 390 ஐத் தொட்டன.  அங்கு மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16 ஆக உள்ளது.

கேரளாவில், கோவிட் -19 இலிருந்து மேலும் 13 பேர் மீட்கப்பட்டனர், மாநிலத்தில் கொரோனா வைரஸால் மீட்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 270 ஐத் தொட்டது. மாநிலத்தில் பதிவான மொத்த 401 வழக்குகளில் 129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை 2 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.   கண்ணூர் மற்றும் காசராகோடு தலா ஒன்று. இருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பயணம் செய்திருந்தனர்.

இதன் மூலம், வெளிநாட்டிலிருந்து வந்து நேர்மறையை பரிசோதித்த மொத்த மக்கள் எண்ணிக்கை 283 ஆகும், இதில் எட்டு வெளிநாட்டினர் உள்ளனர்.

இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் வேளையில், கொரோனா பரவல் தீவிரமாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.