கன்னாபாத்

ரடங்கால் உணவு கிடைக்காததால் பீகார் மாநில சிறுவர்கள் தவளைகளைத் தின்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடெங்கும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.   இதனால் பல தினக்கூலி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கு அல்லாடி வருகின்றனர்.   இவர்களுக்கு அரசு உணவு, உறைவிடம் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி உதவி வருவதாகச் செய்திகள் வருகின்றன.

ஆனால் அது அனைவருக்கும் சென்றடைவதில்லை.  அவ்வாறு உணவு கிடைக்காத நிலையில் உள்ள சிலரில் பீகார் மாநில ஜகன்னாபாத் நகரில் உள்ள ராம்கர் பகுதி மக்களும் உள்ளனர்.   இங்குள்ள மக்கள் அனைவரும் தினக்கூலி வாங்கும் ஏழை மக்கள் ஆவார்கள்.  இவர்களது ஏழ்மை காரணமாகச் சிறுவர்களும் கூலி வேலைக்குச் சென்று காலம் தள்ளி வ்ருகின்றன்ர்.

தற்போது உணவுக்கு வழி இல்லாத இந்த சிறுவர்கள் அருகில் உள்ள சுகாதாரமற்ற குட்டைகளில் இறங்கி உணவுக்காகத் தவளைகளைப் பிடித்துச் சுட்டுத் தின்னும் வீடியோ வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் உள்ள சிறுவர்கள் ஊரடங்கால் பணி ஏதும் கிடைக்கவில்லை எனவும் பள்ளிகள் மூடப்பட்டதால் மதிய உணவும் கிடைப்பதில்லை எனவும் கூறி உள்ளனர்.

[youtube https://www.youtube.com/watch?v=eV9J902XZmg]