தெலுங்கானா:
தெலுங்கானாவில் ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி பல்வேறு மாநிலங்களிலும் ஏப்.,30 வரையிலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மே மாதம் 3 ம் தேதி வரையிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் புதிய உத்தரவு ஒன்றைவெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலத்தில் வரும் 7 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. மேலும் உணவு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களான சோமாட்டோ சுவிக்கி போன்றவற்றிற்கும் தடைவிதிக்கப்படுகிறது. இவ்வாறு அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.