மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் இதைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்ட கோடை கால விடுமுறை போன்றவை ரத்து செய்யப்படுகின்றன.
இந்த கோடைகால விடுமுறை, மே மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரையான காலகட்டத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.