பெர்லின்: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால், அடுத்த வாரம் முதல், ஜெர்மன் நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் சார்பில் கூறப்படுவதாவது; கடந்த நாட்களில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரவலால் நோய்தொற்று அதிகரித்து வந்தது கவலை அளிக்ககூடியதாகவும், சிறைவாச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் இருந்தது.
ஆனால், அந்தக் கடுமையான முடிவுகளுக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. அதற்காக, கடவுளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
ஏப்ரல் 20 முதல் சிறிய கடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன மற்றும் மே 4ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு திரும்புகின்றனர். மற்றபடி, பொது நிகழ்வு மற்றும் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் சாலையில் கூடுவது போன்ற பிற கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.