சென்னை
இன்றும் நாளையும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் வெயில் 104 டிகிரி வரை செல்லும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடையால் தமிழக மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 102 முதல் 104 டிகிரி ஆகி உள்ளது. திருச்சியில் நேற்று வெயில் 104 டிகிரியை எட்டியது. அத்துடன் தஞ்சை,மதுரை, சேலம், வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரி, கோவை 99 டிகிரி மற்றும் சென்னை 97 டிகிரி என வெயில் பதிவாகியது.
சென்னை வானிலை ஆய்வு மையம் மதுரை, திருச்சி, தஞ்சை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் இன்றும் நாளையும் வெயில் 104 டிகிர் வரை செல்லும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இங்கு வசிக்கும் பொதுமக்கள் இன்றும் நாளையும் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் பொதுவாக வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் வறண்ட வானிலையுடன் இருக்கும் எனவும் ஒரு சில இடங்களில் வெப்பச் சலனத்தால் மிக மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.