மும்பை

மகாராஷ்டிர மாநிலத்தில் அதே மாநிலத்தைச் சேர்ந்த கரும்பு அறுவடை தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மேற்குப் பகுதியில் கரும்புத் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன.

இங்கு அறுவடை செய்ய அதே மாநிலத்தில் உள்ள மராத்வாடா பகுதியில் இருந்து தொழிலாளர்கள் வருவது வழக்கமாகும்.

இவர்கள்  மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள  மாவட்டங்களில் தங்கி அறுவடை முடித்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.

தற்போது இவ்வாறு சுமார் 1.31 லட்சம் தொழிலாளர்கள் இந்த பகுதிகளில் உள்ளனர்.

ஊரடங்கு காரணமாக இவர்களுக்குப் பணி இல்லாமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

தற்போது தனிமை இவர்களுக்கு மிகவும் மன உளைச்சலை அளித்துள்ளதால் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்புகின்றனர்.

இதையொட்டி மகாராஷ்டிர அரசு இவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆட்சியர்கள் விரைவில் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப் பயண ஏற்பாடுகள் செய்ய உள்ளனர்.