சென்னை:
தமிழகத்தில் இன்று புதியதாக 55 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.
இன்றுவரை கொரோனா நோய் தடுப்பில் இருந்து 283 பேர் விடுபட்டு வீடு திரும்பி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உளளது.
சென்னையில் மாநிலத்தில் அதிகபட்சமாக 228 பேருக்கும், கோயம்புத்தூரில் 127 பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளன. இன்று அதிகப்பட்சமாக தஞ்சாவூரில் 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.