துபாய்
காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை செய்யும் வசதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் செய்யபட்டுளது.
கொரோனா பரவுதல் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை, சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. பல உலக நாடுகளில் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பரிசோதனைகளை மக்கள் செய்துக் கொள்ளப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவ் துரு என்னும் அடிப்படையில் ஒரு சுகாதார மையம் செயல்பட தொடங்கி உள்ளது. பொதுமக்கள் தாங்கள் வரும் வாகனத்தை விடு இறங்காமல் இங்குப் பரிசோதனை செய்துக் கொள்ளலாம். இங்கு வந்த உடன் பரிசோதனை செய்ய வேண்டிய நபரின் வாகனத்துக்கு மருத்துவக்குழுவினர் தாங்களே வருவார்கள்.
சோதனை செய்ய வேண்டிய நபரின் மூக்கில் இருந்து மாதிரிகள் ஸ்வாப் டெஸ்ட் என்னும் முறையில் எடுக்கப்பட்டு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பபட் உள்ளது இங்கு முன்பதிவுடன் செல்ல வேண்டும். சோதனை முடிவுகள் 48 மணி நேரத்தில் அவரவர் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த வசதி அபுதாபி, ராசல் கைம, அஜ்மான், துபாய் உள்ளிட 14 இடங்களில் உள்ளன. இங்கு சேவைக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.370 திர்ஹாம் வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.7700 ஆகும். முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பரிசோதனை இலவசமாகும்.