டில்லி
சுமார் 10.2 லட்சம் பேருக்குத் திருப்பித் தரவேண்டிய வருமான வரித்தொகை ரூ.4250 கோடியை இன்னும் ஒரு வாரத்தில் வருமான வரித்துறை அளிக்க உள்ளது.
செலுத்தப்பட்ட வருமான வரியில் இருந்து 2.5 கோடி பேருக்குத் திருப்பித் தரவேண்டிய ரூ.1.84 ல்ட்சம் கோடியை விரைவில் அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது. கொரோனா ஊரடங்கால் பொருளாதார சரிவைச் சீரமைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் சுமார் 10.2 லட்சம் பேருக்குத் திருப்பி அளிக்க வேண்டிய தொகையான ரூ.4250 கோடியை இன்னும் ஒரு வாரத்தில் அளிக்க வருமான வ்ர்ரித்துறை நடவடிக்கைகள் இன்று தொடங்கி உள்ளது. இந்த வார இறுதிக்குள் 1.75 லட்சம் பேருக்கும் மீதமுள்ளோருக்கு அடுத்த வாரமும் பணம் அளிக்கப்பட உள்ளது