சென்னை:

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு நிதி கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து,  முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134 கோடியே 54 லட்சத்து 364 ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகப்பட்சமாக அண்ணா தி.மு.க. சார்பில்  ரூ.1 கோடி, நடிகர் அஜித்குமார் ரூ.50 லட்சம்; நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்துள்ள தகவல் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு என முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 6.4.2020 அன்று வரை, மொத்தம் 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 7.4.2020 முதல் 13.4.2020 ஆகிய 7 நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்கள் சார்பாக ரூ.14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492

* அடாஸ் சின்டல் ப்ரெயாஸ் கூட்டமைப்பு ரூ. 5 கோடி

* ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் ரூ.5 கோடி

* சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் ரூ.3 கோடி

* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் ரூ.2 கோடி

* டீயூப் இண்வெஸ்ட்மெண்ட்ஸ் ரூ.2 கோடி

* அண்ணா தி.மு.க. ரூ.1 கோடி

* காமராஜர் துறைமுகம் லிமிடெட் ரூ.1 கோடி

* சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் ரூ.1 கோடி

* EICHER குரூப் ரூ.1 கோடி

தலா ரூ.50 லட்சம் வழங்கியவர்கள்:

* நடிகர் அஜித்குமார்

* டால்மியா சிமெண்ட் பாரத் லிமிடெட்

* ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட்

* கோரமண்டல் எலக்ட்ரிக் கம்பெனி லிமிட்டெட்

* தி இந்தியா சிமெண்ட்ஸ் லிமிட்டெட்

* ஓலா பவுண்டேசன்

* செயின்ட் கோபென்

தலா ரூ.25 லட்சம் வழங்கியவர்கள்:–

* நடிகர் சிவகார்த்திகேயன்

* சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்

* பி அண்ட் சி புராஜக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

* ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட்

* ஆர். ஆனந்தகிருஷ்ணன்

* டோட்லா டைரி லிமிடெட்

* தமிழ்நாடு ஸ்ரீ சீர்வி சமாஜ் மஹா சபா ரூ.21 லட்சத்து 52 ஆயிரம்

* பூலிங் ஏசி ரூ. 20 லட்சம்

* விஜயா மருத்துவமனை ரூ.15 லட்சம்

* வி.சத்தியமூர்த்தி கோ ரூ.12 லட்சம்

* சிஎம்கே புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.12 லட்சம்

* ஆர்எம்கே பொறியியல் கல்லூரி (சம்பளக் கணக்கு) ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 790 ரூபாய்

* தி கரூர் வைஸ்யா வங்கி ரூ.11 லட்சம் ரூபாய்

* அகர்வால் ரிலிப் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் ரூ.11 லட்சம்

* சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் ரூ. 10 லட்சத்து 52 ஆயிரத்து 768

* ஸ்ரீவெங்கடாச்சலபதி அன்கோ ரூ.10 லட்சத்து 10 ஆயிரம்

தலா ரூ.10 லட்சம் வழங்கியவர்கள்:–

* சுந்தரபரிபூரணன் பக்சிராஜன்

* கணேஷ் நடராஜன்

* ஜெயப்ரியா சிட்பண்ட் பிரைவேட் லிமிடெட்

* டிஎன்இபி ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்புகளின் சங்கம்

* தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்

* கொங்குநாடு ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட்

* ஸ்ரீ காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்

* அரவிந்ந் லேபாரட்டரிஸ்

* டிசிஎஸ்ஆர்டி

* சரளா கிருஷ்ணன்

* ரகுநாத் ஜி சுப்ரமண்யன்

* இ.வேலு

* பிஸ்மி பிஷரீஸ்

* இந்தியன் மெட்

* எம்.எஸ் தி இந்தியன் ஆபீஸர்ஸ் அசோசியேஷன்

* சுந்தரவேல் மார்க்கெட்டிங் கம்பெனி (பி) லிட்.

* வெரிஷான் டேட்டா சர்வீஸஸ் (பி) லிட்.

7 நாட்களில் ரூ.55 கோடி

மேற்கண்ட 7 நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 54 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் ஆகும்.

மேற்படி நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.