கோமாளி வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வு…!

சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா தோற்று விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து அனைத்து பகுதியிலும் வாகனங்களில் வருவோர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீசார் சேலம் குகை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரைக் கோமாளி வேடம் அணிந்து வரச் செய்து அவர் மூலம் கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முக கவசமும் வழங்கினர்…!
நன்றி : ஈசன் டி எழில் விழியன் முகநூல் பதிவு
[youtube https://www.youtube.com/watch?v=S1df9QJ3EG4]
Patrikai.com official YouTube Channel