சென்னை:

ந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், நாடு முழுவதும் ரயில்சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது. இதையடுத்து,  முன்பதிவு செய்வதற்கான டிக்கெட் தொகையை ரயில்வே திருப்பித் தரும் என்று அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்த நிலையில், மே 3ந்தேதி வரை நீட்டித்து பிரதமர் அறிவித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்திய ரயில்வே தனது பயணிகள் ரயில் சேவைகளை  மே 3 வரை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. மேலும்,  அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து டிக்கெட் முன்பதிவுகளும் இடைநிறுத்தப்படும்.

அடுத்த உத்தரவு வரும்வரை இ-டிக்கெட் உள்ளிட்ட ரயில் டிக்கெட்டுகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு இல்லை; ஆன்லைன் ரத்துசெய்யும் வசதி செயல்படும் என்று அறிவித்துள்ள ரயில்வே,. மே 3ந்தேதி  வரை முன்பதிவு செய்வதற்கான டிக்கெட் தொகையை ரயில்வே திருப்பித் தரும் என்றும் தெரிவித்து உள்ளது.