டில்லி
பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்குத் தொலைக்காட்சி உரை
பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்.
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்த தேசிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. ஆயினும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் உள்ளது. இதையொட்டி பல மாநில முதல்வர்கள் தேசிய ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதம்ர் மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பொறுத்து ஊரடங்கு விதிகள் மாற்றப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என பிரிக்கப்பட்டுள்ளதால் அந்த அடிப்படையில் தற்போதைய ஊரடங்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி இருமுறை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றி உள்ளார். அத்துடன் இடையில் ஒருமுறை ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். இன்று இரவுடன் ஊரடங்கு முடிவடைவதால் காலை 10 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.
அவர் தனது உரையில் ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்பதால் மக்கள் அவர் உரைக்காக காத்துள்ளனர்.