சென்னை:
வெளி ஊர்களுக்கு செல்ல அனுமதி கோரி காவல்ஆணையர் அலுவலகத்தில் 8500 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 117 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக ஆணையாளர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்ற பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அவசரத் தேவைக்காக வெளியூர் செல்லும் நபர்கள், காவல்துறையில் நேரிடையாகவோ, இ.மெயில் மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
குடும்ப உறுப்பினர் மரணம், அவரச மருத்துவ உதவி மற்றும் குடும்ப உறுப்பினர் திருமணம் போன்ற அத்தியாவசிய தேவை என்றால், அதற்கான ஆதாரம் சமர்ப்பித்து, வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் செல்ல அனுமதி பெறலாம் என தமிழகஅரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர், தங்களுக்குஅனுமதி வழங்க வேண்டும் என்று, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்… இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெளியானதும், ஏராளமானோர் சென்னையில் உள்ள காவல்ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக அங்கு நோய் தொற்று பரவும் வாய்ப்பு ஏற்பட்டதால், அலுவலக வாயிலை காவல்துறையினர் மூடினர்.
இதற்கிடையில், வெளி ஊர்களுக்கு செல்ல அனுமதி கேட்டு இதுவரை 8500 கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளதாகவும், அவர்களில் 117 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதும் என்றும் ஆணையாளர் அலவலகம் தெரிவித்து உள்ளது.
மனுதாரர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மையை பொறுத்தே NOC கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர, போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.