டெல்லி:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்கள் சார்பில் ரூ.151 கோடி நிதி வழங்கி உள்ளனர்.
கொரோனா வைரஸை முறியடிக்க தாராளமாக நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் உள்ள பிரபல தொழிலதிபர்கள், திரையுலக ஜாம்பவான்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களாலான நிதி உதவிகளை வாரி வழங்கி வருகின்றனர்.
மேலும் அனைத்துக் கட்சி எம்.பி., எம்எல்ஏக்களும் தங்களது சம்பளம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதிகளில் இருந்தும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் 13 லட்சம் ஊழியர்கள், தங்களது ஒருநாள் சம்பளமான 151 கோடி ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.