ஆக்ரா:
டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆக்ராவில் இறந்தார்.
ரன்வீர் சிங் என்ற பெயர் கொண்ட அந்த நபர், மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டம், அம்பா போலீஸ் அதிகார வரம்பில் உள்ள பேட்ஃப்ரா கிராமத்தில் வசிப்பவர். இவர் நடந்தே வீடுக்கு சென்று கொண்டிருந்தாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், தேசிய நெடுஞ்சாலை -2-ல் நடந்து சென்ற ரன்வீர், இன் கைலாஷ் மோட் அருகே உயிரிழந்தார். இவர் இறந்து கிடந்ததை பார்த்த ஹார்ட்வேர் கடை உரிமையாளர் சஞ்சய் குப்தா, இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி அரவிந்த்குமார் தெரிவிக்கையில், ரன்வீர் உடல் தளர்ந்து கீழே விழுந்ததும், அவர் அருகில் உள்ளவர்கள், அவரை படுக்க வைத்து, அவருக்கு தேநீரும் மற்றும் பிஸ்கட்டும் வழன் வழங்கியுள்ளனர். பின்னர் ரன்வீரின் நெஞ்சு வலி குறித்து மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவரது உடல்நிலை குறித்து பகிர்ந்து கொள்ள அவரது மைத்துனர் அரவிந்த் சிங்கை தொலைபேசியில் அழைத்தார். மாலை 6.30 மணியளவில், பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார்,
தொடர்ந்து பேசிய அவர், ரன்வீர் தனது சொந்த கிராமத்திற்கு நடந்தே புறப்பட்டார். 200 கிலோ மீட்டர் நடைப்பயணத்தின் சோர்வு மார்பு வலியால் துடித்தார். இருப்பினும், இறப்பதற்கு முன்னர் ரன்வீருக்கு, ஒருவர் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு டிரக்கில் லிப்ட் கொடுத்துள்ளார். ஆனால் ரன்வீரின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த ரன்வீரின் தம்பி சோனு சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரன்வீர் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியின் துக்ளகாபாத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவர் நடந்தே கிராமத்திற்கு புறப்பட்டார். நாங்கள் ஒரு ஏழை விவசாயி, தந்தையின் வருமானம் இல்லாமல் அவரது குழந்தைகள் எப்படி உயிர்வாழ்வார்கள் என்று தெரியவில்லை. என்று வருத்ததுடன் தெரிவித்தார்.