திருச்சி:

மிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

துபாயில்  இருந்து திருச்சி வந்த ரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வரும் அந்த நபர் நல்ல உடல்நலமுடன் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.