திருப்பதி
திருப்பதியில் காய்கறி வாங்க ஒருவர் பின் ஒருவராக இடைவெளி விட்டுச் செல்வது பாராட்டைப் பெற்றுள்ளது.
தேசிய ஊரடங்கு முன்னிட்டு காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் மட்டும் திறந்துள்ளன.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதனால் கூட்டம் கூடுவது தவிர்க்க முடியாதது ஆகி உள்ளது.
அதைத் தவிர்க்க திருப்பதி நகரில் காய்கறி மார்கெட்டில் மக்கள் வரிசையாக வந்து போக போதுமான இடைவெளி விட்டு தரையில் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
அவற்றில் மக்கள் வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராகக் காய்கறி வாங்கிச் செல்கின்றனர்.
இவை புகைப்படமாக்கப்பட்டு டிவிட்டரில் பதியப்பட்டுள்ளன.
நெட்டிசன்கள் இதற்காகத் தென் இந்திய பொது மக்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.