லக்னோ:

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உபி. மாநிலத்தில் பெண் சாமியார் ஒருவர், தனது பக்தர்களைக் கூட்டிவைத்துக்கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கூட்டம் கூட்டப்பட்டதை அறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து வந்து அனைவரையும் கலைந்து செல்ல கூறினார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த பெண் சாமியார், கையில் வாளை எடுத்துக்கொண்டு, காவல்துறையினரிடம் வந்துபார் என்று, சண்டைக்கு கிளப்பி விட்டார்..

அவரை எச்சரிக்கை செய்த காவல்துறையினர், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்து, அந்த பெண் சாமியாரினிரயை  மடக்கி கைது செய்து அழைத்துச் சென்றனர்…

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக் கூடாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில்,  உத்தர பிரதேச மாநிலத்தின், தியோரியா என்ற பகுதியில் மேகா புத்வா என்ற இடத்தில்  ‘மா ஆதி சக்தி’  என்ற பெயரிலான மடத்தை பெண் சாமியார் ஒருவர் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

இவர், தனது வீட்டில் 100க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் பிரார்த்தனை கூட்டத்தில்  ஈடுபட்டு வந்தார். அவர்களை   கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த பெண் சாமியாரோ போலிஸாரை நோக்கி வாளை நீட்டி பதிலுக்கு ஆவேசமாகப் பேசினார்..

இதனால் பொறுமையிழந்த காவல்துறை அதிகாரி மிஷ்ரா, தனது பரிவாரங்களுடன் சென்று அந்த பெண் சாமியார் மற்றும் அவரது கணவர் உள்பட 13 பேரை கைது செய்து இழத்துச் சென்றனர்… அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.