கொரோனா கேரளா மாநிலத்தை புரட்டி போட்ட சூழ்நிலையிலும், அங்குள்ள மதுக்கடைகளை மூட மறுத்து விட்டார், முதல்வர் பினராயி விஜயன்.
கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்த காசர்கோடு பகுதியில் மட்டும் மதுக்கடைகள் மூடப்பட்டன.
தமிழகத்தை போலவே ,அந்த மாநிலத்திலும் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தி வருகிறது.
மற்ற வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்ட நிலையில், கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு, கொரோனா பரவாமல் இருக்க- கியூ வரிசையில் குடிமகன்கள் போலீஸ் காவலில் நிறுத்தப்பட்டு , சரக்கு சப்ளை செய்யப்பட்டது.
‘’ கடந்த காலங்களில் மதுக்கடைகளை அடைத்ததால் பல கசப்பான நிகழ்வுகள் நேர்ந்தன. எனவே மதுக்கடைகளை மூடப்போவதில்லை’’ என திரும்ப திரும்ப கூறி வந்தார்,பினராய்.
நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்த நிலையில்- அங்குள்ள எதிர்க்கட்சிகள் மதுக்கடைகளை உடனடியாக அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
வேறு வழி இல்லாமல் மதுக்கடைகளை அடைக்க ஒப்புக்கொண்டார், பினராய் விஜயன்.
நேற்று முதல் அங்கு மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டன.
நாளொன்றுக்கு சுமார் 40 கோடி ரூபாய் வருமானம் கொட்டியதால்,மதுக்கடைகளை அடைக்க தயக்கம் காட்டி வந்தார், முதல்வர்.