சென்னை
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தற்போதைய விவரங்கள் வருமாறு
தமிழ் நாட்டில் முதல் கொரோனா மரணம் நேற்று நிகழ்ந்துள்ளது.
மாநிலத்தில் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளன்ர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை 8 ஆவது சோதனை நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க ஒரு மொபைல் செயலியைத் தமிழகக் காவல்துறை உருவாக்கி உள்ளது.
சுய தனிமைப்படுத்துதல் விதிகளை மீறிய மூவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மக்களுக்கிடையே போதுமான தொலைவைக் கடைப்பிடிக்காத 400 காய்கறிக்க்டைகள் மூடப்பட்டன.
ஒன்றாம் வகுப்பில் இருந்து 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் தேர்வு இன்றி அடுத்த வகுப்புக்களுக்கு அரசு மாற்றி உள்ளது.
நேற்று முன் தினம் நடந்த 12 ஆம் வகுப்புத் தேர்வை எழுதாதவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த உள்ளதாக அரசு நேற்று அறிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் சென்னை சாலைகளில் சுற்றித் திரியும் போது மீட்கப்பட்டார்.
பாதுகாப்பு ஊழியரைத் தாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிகிச்சை மூலம் குணமடைந்த 2 ஆம் கொரோனா நோயாளி வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளார்.
காவலர்களால் மருத்துவர்கள் மற்றும் ஊடகவியலர்கள் தொல்லைக்குள்ளாவதால் காவலர்கள் கருணையுடன் நடக்க வேண்டும் என வேண்டுகோள்.