கொழும்பு:
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், தேசிய மருத்துவமனைக்கு, மேலும் உபகரணங்கள் வாங்க, இலங்கை கிரிக்கெட்வீரர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இலங்கையிலும் புகுந்துள்ளது. அங்கும் கோத்தபய தலைமை யிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்புக்கு இதுவரை 86 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 222 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட தேசிய மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களும் வழக்கறிங்ர்கள் சிலரும், பங்களித்துள்ளனர்.
அவர்களின் நிதியைக்கொண்டு, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முக்கியமான தேவைகளில் ஒன்றான தேசிய மருத்துவமனைக்கு வீடியோ லாரிங்கோஸ்கோப்புகளை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த உபகரணங்கள் இலங்கைக்கு வந்தவுடன் தேசிய மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் ரூ 25 மில்லியன் நிதி உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.