லண்டன்:

ங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை முடிவு பாசிடிவ் ஆக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-க்கு (வயது 71)  நடத்தப்பட்ட  கொரோனா வைரஸ் சோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து அரச மாளிகையான கிளாரன்ஸ் ஹவுஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தற்போது அரச வாரிசான சார்லஸ் நலமுடனும், ஆரோக்கியத்துடன் இருக்கிறார், ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இளவரசர் சார்லஸ், சமீபத்திய வாரங்களில் பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தற்போது ஸ்காட்லாந்தில் தனது மனைவியுடன் முகாமிட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.