வயநாடு:
கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வயநாடு எம்.பி.யான ராகுல்காந்தி, தனது தொகுதி மக்களின் தேவைக்காக சானிடைசர் மற்றும் முகக்கவசம் அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி, ஆயிரம் லிட்டர் சானிடைசர் மற்றும் 25 ஆயிரம் முகக்கவசங்கள், வயநாட்டில் உள்ள ராகுல்காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோர தாண்டவத்தை தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு (லாக்டவுன்) உள்ளது
இந்தநிலையில், கொரோனா வைரஸை எதிர்க்க மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மிக மிக அவசியம் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தி இருந்தார். மேலும் தனதுதொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, 1,000 லிட்டர் ஹேண்ட் சானிடிசர் மற்றும் 25,000 முகமூடிகள் தனது தொகுதியான வயநாட்டுக்கு அனுப்பி வைத்தார். தற்போது, அவைகள் அனைத்தும் அடங்கிய பெட்டிகள், வயநாடு தொகுதி முக்காமில் உள்ள காந்தியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த முகமூடி மற்றும் கை சானிடைசர் வயநாடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளால் விநியோகிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.