கொரோனாவை தடுக்க இரு தினங்களுக்கு முன்பே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது, தெலுங்கானா மாநில அரசு. பலர் இதனை பொருட்படுத்துவதாக இல்லை.

இதனால் அந்த மாநில முதல் –அமைச்சர் கே.சந்திரசேகர ராவ் கடும் எரிச்சலில் இருக்கிறார்.
‘ ஊரடங்கு உத்தரவை பலர் மீறுகிறார்கள். நமது மாநிலத்தில் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஆணையை மீறி வீட்டுக்குள் முடங்கி கிடக்காமல்,வெளியே வந்தால் அவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை’’ என்று ஆவேசமாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
‘’ பொதுமக்கள் தெருவில் நடமாடினால். பெட்ரோல் பங்குகளை மூடி விடுவேன். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தையும் அழைப்பேன்’’ என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் கொந்தளித்தார்.
Patrikai.com official YouTube Channel