திருப்பதி

கொரோனா அச்சுறுத்தலால் திருப்பதிக்குப் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மலைப்பாதைகளில் வன விலங்குகள் உலவி வருகின்றன.

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா இந்தியாவின் உள்ளும் பரவி வருகிறது.   இதையொட்டி மக்கள் அதிகம் வரும பல இடங்களுக்கும் யாரும் வரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதில் திருப்பதி கோவிலும் ஒன்றாகும்.   இங்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி நகரில் கோவில் பணியாளர்கள் மற்றும் நகரில் வாழும் மக்கள் மட்டும் அடையாள அட்டை காண்பித்த பிறகு நடமாட அனுமதி அளிக்கப்ப்டுகிரது.  அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அந்த அனுமதி அளிக்கப்பட்டதால் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.  தேவஸ்தான பணியாளர்கள் மட்டும் திருமலைக்கு செல்ல ஓரிரு பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளால்  திருமலை மலைப்பாதை வெறிச்சோடி காணப்படுகின்றன.  இந்த பகுதியில் சிறுத்தை, கரடி, ஓநாய், யானை, நரி, முள்ளம்பன்றி போன்ற பல் வன விலங்குகள் உள்ளன.  மக்கள் நடமாட்டம் இல்லாததால் அவை வெலியில் வந்து மலைப் பாதைகளில் உலவி வருகின்றன.   அடர்ந்த வனப்பகுதியிலிருந்து மான்கள், சிறுத்தைகள், பாம்புகள், கரடி போன்றவை சாலைக்கு வந்துள்ளன.

முன்பு திருமலை மற்றும் மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாடும் போது உடனடியாக வன ஊழியர்கள் அந்த விலங்குகளை விரட்டி விடுவார்கள்.  தற்போது யாரும் வருவதில்லை என்பதால் அந்த விலங்குகள் விரட்டப்படுவதில்லை.   பக்தர்கள் மீண்டும் திருமலைக்கு வர அனுமதி அளிக்கும் வரை மனிதர்களுக்கு மட்டுமே  தடை எனவும் விலங்குகளுக்குத் தடை இல்லை எனவும் உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.