புதுச்சேரி:

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் வரும் 31ந்தேதி வரை பள்ளிக் கல்லூரி களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மத்திய மாநில அரசுகளின் எச்சரிக்கையை மீறி புதுச்சேரியில்  4 பள்ளிகள் இயங்கியதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி பள்ளிகள் அரசாங்க உத்தரவுகளை மீறி செயல்பட்டு வருவதாக குழந்தைகள் உரிமை நடவடிக்கைகள் அமைப்பு  குற்றம் சாட்டியது. இதைத்தொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.

பொன்னே நேரு மேல்நிலைப் பள்ளி,   பிரைனி ப்ளூம்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளி, சுப்பிரமணிய பாரதி  மேல்நிலைப் பள்ளி, மற்றும் கோடத்தூரில் உள்ள சாண்டா கிளாரா கான்வென்ட் ஆகியவ பள்ளிகள் அரசின் உத்தரவுகளை மீறி செயல்பட்டு வந்தாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில்,  பள்ளிக்கல்வித்துறை சார்பில், உடனே விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வி இயக்குனர் ருத்ரா கவுட் கூறினார். அவர்களின் விளக்கத்தைத் தொடர்ந்தே,  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.