சென்னை:

ட்டுமானத் தொழிலாளர்களுக்கான நிதியை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என தொழிலாளர் சங்க அமைப்புகள் மத்திய, மாநில அரசை வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் நல வாரியத்தின் சிறப்பு தொகுப்பு தொகுப்பாக ஆயிரம் ரூபாயும், அவர்களுக்கு  17 கிலோ அரிசி , ஒரு கிலோ பருப்பு , சமையல் எண்ணெய்  வழங்கப்படும்.

தமிழகத்தில் சிக்கி தவிக்கும் பிற மாநிலத்தை சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளங்கண்டு குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு ,  சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்காக மத்தியஅரசு சுமார் 52000 கோடி ரூபாய் செஸ் நிதியாக வழங்கி உள்ளது. இந்த நிதியில் இருந்து,  கட்டுமானத் தொழிலாளர்களின் கணக்கில் டிபிடி முறைடியில் மாற்றி வழங்கும்படி  அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 3.5 கோடி தொழிலாளர்கள் நல வாரியத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.