ஜாமீன், முன் ஜாமீன், பரோல் வேண்டி கைதிகள், நீதிமன்றங்களில் மனு மேல் மனு போட்டு, நாள் கணக்கில்- மாதக்கணக்கில் காத்திருந்த காலம் உண்டு.
கொரோனா வைரஸ் , கைதிகளின் வாழ்க்கை சூழலை, தலைகீழாக மாற்றி விட்டது.
கொரோனா தாக்குதல் காரணமாக மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள் தங்களை தனிமை படுத்திக்கொண்டு, உயிர் பிழைக்க போராடிக்கொண்டிருக்கின்றன.
இதற்கு சாத்தியமில்லாத இடங்களாக சிறைச்சாலைகள் உள்ளன.
பல நாடுகள் கைதிகளை வெளியே அனுப்பி விட்டது.
இந்தியாவும் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
வெளியே இருந்து அவ்வப்போது சிறைக்கு வரும் புது விசாரணை கைதிகளால் ’நிரந்தர’ கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
இதனை தவிர்க்க இரு ரகங்களை சேர்ந்த கைதிகளையும், ஒரு அளவுகோல் நிர்ணயித்து, ஜாமீன் அல்லது பரோலில் வீட்டுக்கு அனுப்ப ஆவன செய்யுமாறு உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு ‘அட்வைஸ்’ செய்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு குறைவாக சிறை தண்டனை பெற்றுள்ள கைதிகள் மற்றும் சின்ன சின்ன குற்றங்கள் செய்து ’உள்ளே’ வந்தோர் ஜாமீனிலும், பரோலிலும் விடுவிக்கப்படுவார்கள்.