புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையால், அறிவிக்கபடாத லாக்டவுன் காரணமாக கடந்த சில வாரங்களாக, தினகூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆறு முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து டாடா சன்ஸ் நிறுவன தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்ததாவது;

நிதி பற்றாக்குறை இலக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீத புள்ளியால் தளர்த்த வேண்டும் என்றும், பாதிக்கபப்ட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நேரடியாக நிதியுதவியை பிரதமர் மோடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

கோட்டக் மஹிந்திரா வங்கியின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான உதய் கோட்டக், இந்த சூழ்நிலையில், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து 25 வயதுக்கு மேற்பட்ட அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் உடனடியாக 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் இதுவே அந்த ஊழியர் 65 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், அவரது வங்கி கணக்கில் 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்,

ஆர்.பி.-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா பேசுகையில், இந்த நேரத்தில் அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான டிபிடி மிகவும் முக்கியமானது என்றார்.

அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி மற்றும் தெற்கு குஜராத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தலைவர் கேதன் தேசாய் ஆகியோரும்தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கு ஆதரவாக பேசினர்.

கடந்த திங்கள் கிழமையன்று நிதி அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின் படி, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒப்பந்த, சாதாரண மற்றும் அவுட்சோர்ஸ் செய்யும் அனைத்து ஊழியர்களும், ஏப்ரல் 30 வரை பணிக்கு வராவிட்டாலும் வந்ததாகவே கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2011-12 ஆம் ஆண்டில் என்எஸ்எஸ்ஓ வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 39.14 கோடி தொழிலாளர்கள் உள்ளனர், இது 47.41 கோடி வேலைவாய்ப்பில் 82.7 சதவீதமாக உள்ளது.

கடந்த சில வாரங்களாக, பல தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா அல்லது முறைசாரா துறையின் ஒரு பகுதி லாக்டவுன் செய்யப்பட்டதால், வேலை கிடைக்கவில்லை. இதனால், பெரிய நகரங்களை விட்டு அவர்கள் வெளியேறி தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வேணு சீனிவாசன், தனது நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் சம்பளத்தை குறைத்து கொண்டதுடன், தொழிலாளர்களுக்கு தேவையான நிதியுதவி அளிக்கப்படும் என்றார், தான் பிரதமரிடம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு டிபிடி தேவை என்றும் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

இந்தியா இன்க் நிறுவனத்தின் 20 பிரதிநிதிகளில், சந்திரசேகரன், கோடக், கோயங்கா, தேசாய், வேணு சீனிவாசன், சஜ்ஜன் ஜிண்டால், சங்கீதா ரெட்டி, விக்ரம் கிர்லோஸ்கர் மற்றும் நிரஞ்சன் ஹிரானந்தனி ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தினர்.