பெர்லின்

ஜெர்மனி அதிபர் ஆஞ்செலா மார்கெல் தானே கடைக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்கும் புகைப்படம் வைரலாகிறது.

அரசியல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பிரபலங்கள் சாதாரண மக்களிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருப்பது ஒரு வழக்கமாக  உள்ளது.

இதற்குப் பாதுகாப்பு என்பது முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

வெளிநாட்டுப் பிரபலங்கள் நமது நாட்டுக்கு வரும் போது நடக்கும் கெடுபிடிகளை நாம் பார்த்து இருப்போம்.

அதைப் போலவே பல உள்நாட்டுப் பிரபலங்கள் வரும் போதும் கெடுபிடிகள் உண்டு.

ஆனால் ஜெர்மனி நாட்டில் நிலை வேறாக உள்ளது.

ஜெர்மனி நாட்டின் அதிபர் ஆஞ்செலா மார்கெல் தானே கடைக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.

அவர் சூப்பர் மார்கெட்டில் உள்ள தள்ளுவண்டியைத் தானே தள்ளிச் சென்று மளிகைப் பொருட்கள், 4 பாட்டில் ஒயின், மற்றும் கழிவறை காகிதம் உள்ளிட்டவற்றை வாங்கி உள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.