ண்டன்

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பிரிட்டனில் உள்ள அனைத்து மக்களும் சுகாதர ஊழியர்களை பாராட்டி கைதட்டி ஊக்கம் அளித்தனர்.

கைதட்டலை ரசிக்காத கலைஞன் இல்லை என்பது பழமொழி.  மக்கள் அனைவரும் தங்கள் சேவைக்கு பாராட்டு கிடைப்பதை ஒரு அங்கீகாரம் என கருதி வருகின்றனர்.   கைத்தட்டல் என்பது தங்களின் அங்கீகாரத்தை தெரிவிக்கும் பாராட்டாகும்.   எனவே மக்கள் கைதட்டல் மூலம் தங்கள் மகிழ்ச்சி மற்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா பரவுதல் த்டுப்பு சேவைகளில் ஏராளமான சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களின் பணியை பாராட்ட பிரிட்டன் நாட்டின் சமூக வலை தளக் குழுக்கள் முடிவு செய்தன.  இதையொட்டி நம்மைக் காப்பாற்றுபவர்களுக்கு கைத்தட்டல் என்னும் ஒரு நிகழ்வை ஏற்படு செய்ய முனைந்தனர்.  இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

இந்த நிகழ்வுக்கு பிரபல பாடகர் செரில், நடிகை லிசா ரிலே, ரேடியோ ஜாக்கி பியர்ஸ் மோர்கன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து தங்கள் ரசிகர்களிடம் இது குறித்த அறிவிப்பை பகிர்ந்தனர்.  இதையொட்டி நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு அனைவரும் இணைந்து கைத்தட்டி தங்கள் பாராடுதலை சுகாதார ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாயிலில், மேல் மாடியில் என குழுமி நின்று ஒரே நேரத்தில் கைதட்டி பாராட்டி உள்ளனர்.  இது குறித்து மருத்துவ மாணவர் ஜோ வில்சன், “இந்த நிகழ்வுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.  மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்களும் இந்த சேவையில் இறங்கி உள்ளனர்.  அவர்களை பாராட்டுவதில் மக்கள் பெருமை அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.