சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே மூவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தன்ர்.
அதில் ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார்.
இன்று தாய்லாந்தை சேர்ந்த 2 பேர் மற்றும் நியுஜிலாந்தில் இருந்து வந்த ஒருவர் என மூவருக்குப் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
அவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இவர்களுடன் தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel