சென்னை:
வரும் 22ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் தனியார் பால் விநியோகம் செய்யப்படாது என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஏற்று, அன்றைய தினம் வணிக நிறுவனங்கள், முழு அடைப்பு நடத்தவதாக அறிவித்துஉள்ளன. கோயம்பேடு மார்கெட்டும் மூடப்படும் என அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தனியார் பால் விநியோகம் செய்யப்படாது என்று பால்முகவர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.