பாலஸ்தீன்

பாலஸ்தீனில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது.   அனைத்து உலக நாடுக்ளிலும்   அரசு தரப்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது.   அதைப் போல் பல தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடத்துகின்றன.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகை, சுவரொட்டி உள்ளிட்டவை வைக்கப்பட்டு மக்களுக்கு கொரோனா குறித்த அறிவை ஊட்டி வருகின்றன.  அவ்வகையில் பாலஸ்தீனில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்துள்ளது.

பாலஸ்தீன் நாட்டில் உள்ள மசூதி ஒன்றின் தலைவர் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை கூட்டத்தில் ஒரு மருத்துவர் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளார்.  இது குறித்து அவர், “மனித நேயம் என்பது மதத்துக்கும் அப்பாற்பட்டது.  இந்த பிரச்சாரம் மத சம்பந்தமானது அல்ல.  மனிதர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.