உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், பல நடவடிக்கைகள் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில் சில :
சிங்கப்பூர் : உணவு விடுதிகளில், ஒரு மேஜைக்கு ஒருவர் மட்டுமே அமர அறிவுறுத்தல், குழுவாக வந்தால் தகுந்த இடைவெளிவிட்டு அமரவும் அறிவுறுத்தல்.
இத்தாலி : அரசு மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாததால், கொரோனா வைரஸ் பாதித்த 80 வயதுக்கு மேல் இருக்கும் முதியவர்களுக்கு சிகிச்சயளிப்பதை கைவிடுவதென முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்கா : வாஷிங்டன் மாகாணத்தில் அனைத்து மதுபான கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டன, உணவகங்கள் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது, 50 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்திருப்பது மாகாண நிர்வாகம்.
ஸ்பெயின் : கொரோனா வைரஸ் நோயாளிகளை பராமரிக்க ஏற்பட்டுள்ள, மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க, முறையான பயிற்சி இல்லாத மருத்துவ மாணவர்களை ஈடுபடுத்த திட்டம்.
பிரான்ஸ் : பல்வேறு நாடுகளை போல் இங்கும் மக்கள் வெளியில் செல்ல நிபந்தனைகள் இருப்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்கள்.
இங்கிலாந்து : இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபடாததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரி பல்வேறு தரப்பினர் பிரதமர் போரிஸ் ஜான்சானுக்கு கோரிக்கைவைக்கின்றனர். அதே சமயம், 70 வயதுக்கு மேற்பட்டவர்களை தனிமைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கொரோனா வைரஸ் சகல சாமானியர்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ள நிலையில், இயல்பு நிலை திரும்ப சிலநாட்கள் ஆகும் என்பதால், அரசின் தடை உள்ளிட்ட நிபந்தனைகளால், வாழ்வாதாரம் இழந்தவர்கள் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பிவருகின்றனர்.